கோவை, அக். 8: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முயற்சியால் கோவை மாநகராட்சிக்கு, ஜவஹர்லால் நேரு நகரப் புனரமைப்புத் திட்டம் கிடைத்தது என்று அக் கட்சியின் கோவை மேயர் வேட்பாளர் யு.கே.சிவஞானம் கூறினார்.
ஸ்ரீபதி நகர், நஞ்சுண்டாபுரம், சாரமேடு, மஜித்காலனி, கரும்புக்கடை, பாரதி நகர், காமராஜ் நகர், காமாட்சியம்மன் கோயில் வீதி, குனியமுத்தூர் பகுதிகளில் அவர் சனிக்கிழமை பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியது:
அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஜவஹர்லால் நேரு நகரப் புனரமைப்புத் திட்டம் என்ற பெருந்திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இத் திட்டத்தில் கோவை மாநகராட்சியையும் சேர்க்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி, நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர் முகமது சலீம் ஆகியோர் கடும் முயற்சி செய்தனர்.
இதன் பயனாக, ரூ.3,186 கோடிக்கான அத் திட்டம் மாநகராட்சிக்கு கிடைத்தது. ஆனால், இந்த நிதியை ஒழுங்காகப் பயன்படுத்தி ஒரு திட்டத்தையும் மாநகராட்சி நிர்வாகம் செய்யவில்லை.
பாதாளச் சாக்கடை, திடக்கழிவு மேலாண்மை, குடிநீர்த் திட்டம் என ஒரு திட்டத்தைக் கூட முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. 2ஜி ஸ்பெக்ட்ரம், நில மோசடி என ஊழல் புகார்களில் சிக்கியுள்ள திமுகவும், அவர்களுக்குத் துணையாக இருந்த காங்கிரஸ் கட்சியும் தான் மாநகராட்சி நிர்வாகத்தில் இருந்தன. பெருந்திட்டம் கிடைத்தபோதும் மக்களுக்கான அடிப்படை வசதிகளை அவர்களால் செய்து கொடுக்க முடியவில்லை.
அம்மன்குளம், உக்கடம் கழிவுநீர்ப் பண்ணையில் அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டினர். ஏழை, எளிய மக்கள், உழைப்பாளிகளுக்காக கட்டப்பட்ட அந்த வீடுகள் தற்போது குடியேற முடியாத நிலையில் இருக்கிறது. இந்த பிரச்னைகளையெல்லாம் எதிர்த்து தொடர்ந்து மாநகராட்சி மன்றத்திலும், மன்றத்துக்கு வெளியேயும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடி வருகிறது. அதே எண்ணத்தில் இருக்கும் தேமுதிகவுடன் இணைந்து தற்போது மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடுகிறது.
ஏழை, எளிய, உழைக்கும் மக்களுக்காகக் குரல் கொடுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேமுதிக கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளித்து சிறப்பான உள்ளாட்சி நிர்வாகம் அமைய வழிவகுக்க வேண்டும் என்றார்.
பிரசாரத்தின்போது அந்தந்த வார்டுகளின் உறுப்பினர் பதவிக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேமுதிக வேட்பாளர்கள் மற்றும் கட்சியினர் உடன் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இரவு முழுவதும் அடித்து வீட்டை விட்டு துரத்தினர்! இன்று காமன்வெல்த் தங்கப் பதக்கத்துடன் ஷர்மிளா தன்கர்!

இன்றைய செய்திகள் ஜூலை 28 - நேரலை

முதல்வர் விஜய்க்கு மிரட்டல்: திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மனு மீதான உத்தரவு ஒத்திவைப்பு!

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பா? அமைச்சர் நிர்மல் குமார் பதில்
விடியோக்கள்

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பா? அமைச்சர் நிர்மல் குமார் பதில்


