கோவை, அக்.8: போக்கியத்திற்கு வீடு தருவதாகக் கூறி ரூ.5.5 லட்சம் மோசடி செய்ததாக ரியல் எஸ்டேட் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
÷கோவை சாயிபாபா காலனி கே.கே.புதூரைச சேர்ந்தவர் பி.வி.பாலச்சந்திரன் (48). இவர் போக்கியத்திற்கு வீடு தேடிக் கொண்டிருந்தார். அப்போது வேலாண்டிபாளையம் ராமசாமி லே அவுட்டைச் சேர்ந்த கணேசன் (38) என்பவர் தன்னை ரியல் எஸ்டேட் உரிமையாளர் என அறிமுகம் செய்து கொண்டார். பின்னர் போக்கியத்திற்கு வீடு பிடித்துத் தருவதாகக் கூறி, சுக்கிரவாரப்பேட்டை சித்தி விநாயகர் கோயில் வீதியில் உள்ள தனது வீட்டை காண்பித்து, போக்கியத் தொகையாக ரூ.5.5 லட்சம் பெற்றுள்ளார்.
÷ஆனால், வீட்டை பாலசந்திரனுக்கு ஒப்படைக்கவில்லை. மேலும் வாங்கிய தொகையையும் திருப்பித் தரவில்லை. பணம் கேட்டபோதெல்லாம் கணேசன், காலம் கடத்தி வந்துள்ளார். அதையடுத்து கணேசன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகரக் காவல் ஆணையர் அமரேஷ் புஜாரியிடம், பாலச்சந்திரன் புகார் கொடுத்தார்.
÷கோவை மாநகரக் காவல் துணை ஆணையர் செந்தில்குமார் (குற்றப் பிரிவு) மேற்பார்வையில் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸôர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போக்கியத்திற்கு வீடு தருவதாகக் கூறி ஏமாற்றிய கணேசனை வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாப்ள சீமான்... இதேபோன்ற மேடை 2 மாதங்களுக்கு முன்பு அமைந்திருந்தால்...: நயினார் நாகேந்திரன் பேச்சு!

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

கார்கில் போர் நினைவிடத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை!

யானைகள் நடமாட்டம்! குறிஞ்சி பூக்களைப் பார்வையிட பொதுமக்களுக்குத் தடை!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


