பெ.நா.பாளையம், அக். 8: துடியலூர் காவல் நிலையத்தில் போலீஸôருக்கும் வழக்குரைஞருக்கும் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக, ஐந்து போலீஸôர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
÷வழக்குரைஞரான ஆனந்தீஸ்வரன் வழக்கு தொடர்பாக இங்கு சென்ற போது வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, சப்இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி, தலைமைக் காவலர் கோபாலகிருஷ்ணன், காவலர்கள் சின்னராஜ், முகமது இஸ்மாயில், சுஜி ஆகியோர் வழக்குரைஞரைக் தாக்கியுள்ளனர்.
÷இதையடுத்து, கோவை வழக்குரைஞர் சங்க நிர்வாகிகள் உள்பட 50க்கு மேற்பட்ட வழக்குரைஞர்கள் காவல்நிலையத்தை முற்றுக்கையிட்டு, சம்பந்தப்பட்ட போலீஸôர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
÷எஸ்.பி உமா, ஆர்.டி.ஓ சாந்தகுமார், தாசில்தார் வீரபத்திரன் ஆகியோர் இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இரவு 1 மணிவரை நீடித்த பேச்சுவார்த்தையின் முடிவில் ஐந்து போலீஸôரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
÷மேலும் இவர்கள் மீது கொலை முயற்சி, சட்ட விரோதமாகக் கூடுதல், தகாத வார்த்தைகளால் திட்டுதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து வழக்குரைஞர்கள் முற்றுகையைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
நீதி விசாரணைக்கு
ஆட்சியர் உத்தரவு:
துடியலூர் காவல் நிலையத்தில் வழக்குரைஞர் ஆனந்தீஸ்வரன் தாக்கப்பட்டது தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட ஆட்சியருமான மு.கருணாகரன் பிறப்பித்த உத்தரவு:
÷கோவை துடியலூர் காவல் நிலையத்தில் கடந்த அக். 7ம் தேதி காவல் துறையினர் வழக்குரைஞர் ஆனந்தீஸ்வரன் என்பவரைத் தாக்கியதாக எழுந்த பிரச்னை தொடர்பாக, தமிழ்நாடு காவல் நிலை ஆணை 151-ன் கீழ் முழுமையான நீதி விசாரணை மேற்கொண்டு விவரமான அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோவை உட்கோட்ட நடுவரான வருவாய் கோட்டாட்சியருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இரவு முழுவதும் அடித்து வீட்டை விட்டு துரத்தினர்! இன்று காமன்வெல்த் தங்கப் பதக்கத்துடன் ஷர்மிளா தன்கர்!

இன்றைய செய்திகள் ஜூலை 28 - நேரலை

முதல்வர் விஜய்க்கு மிரட்டல்: திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மனு மீதான உத்தரவு ஒத்திவைப்பு!

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பா? அமைச்சர் நிர்மல் குமார் பதில்
விடியோக்கள்

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பா? அமைச்சர் நிர்மல் குமார் பதில்


