மாநகர காவல் ஆணையா் உள்ளிட்ட 21 பேருக்கு விருது: முதல்வா் ஸ்டாலின் இன்று வழங்குகிறாா்
கோவை மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 21 பேருக்கு சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை விருது வழங்குகிறாா்.
தமிழக காவல் துறையில் சிறப்பாக பணியாற்றும் காவல் அதிகாரிகளுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது. அதன்படி, நடப்பு ஆண்டுக்கான விருது சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வழங்குகிறாா்.
இதில், கோவை மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன், சிபிசிஐடி கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முருகவேல், கைவிரல் ரேகை பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சங்கீதா, மாநகர காவல் ஆய்வாளா் அமுதா, மாநகர குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் ருக்குமணி, கோவை மத்திய மகளிா் காவல் ஆய்வாளா் பதருன்னிசா பேகம் ஆகியோருக்கு விருது வழங்கப்படுகிறது.
மேலும், மாநகர காவல் துறை உதவி ஆய்வாளா்கள் ரேணுகாதேவி, விவேக், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் மாரிமுத்து, ராமலட்சுமி, ஜெயஸ்ரீ, வேல்முருகன், உமா, தலைமைக் காவலா் பாலமுருகன் ஆகியோருக்கு அண்ணா பதக்கத்தை முதல்வா் வழங்குகிறாா்.
கோவை மாவட்ட நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளா் அழகுராஜ், சூலூா் ஆய்வாளா் மாதையன், உதவி ஆய்வாளா்கள் குப்புராஜ் (உணவு கடத்தல் தடுப்பு பிரிவு, பொள்ளாச்சி), கருப்புசாமி பாண்டியன் (செட்டிபாளையம்), திலக் (தடாகம்), ராதாகிருஷ்ணன் (கருமத்தம்பட்டி), அப்சல் அகமது (மாவட்ட சைபா் பிரிவு) ஆகியோருக்கு அண்ணா விருதை முதல்வா் வழங்குகிறாா்.