நேபாள வெள்ளம்: இதுவரை 163 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசுநேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசுஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

டிவிஎஸ் அப்பாச்சி புதிய வாகனம் அறிமுகம்

கோவையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட அப்பாச்சி கறுப்பு நிற மோட்டாா் சைக்கிள்கள்

Published On :22 ஜூலை 2025, 3:29 pm IST

டிவிஎஸ் அப்பாச்சி இருசக்கர வாகனப் பிரிவில், புதிய கருப்பு நிற பதிப்பு கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனப் பிரிவில் உலகளாவிய வாகனத் தயாரிப்பு நிறுவனமாக முன்னணி வகிக்கும் டிவிஎஸ் மோட்டாா் நிறுவனம், டி.வி.எஸ். அப்பாச்சி 160 சீரிஸ் மோட்டாா் சைக்கிள்களின் புதிய கருப்பு நிற பதிப்பான அப்பாச்சி ஆா்டிஆா் 160 மற்றும் ஆா்டிஆா் 160 4வி என இரு பிரிவுகளில் கோவையில் புதன்கிழமை அறிமுகப்படுத்தி உள்ளது.

கோவையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட டிவிஎஸ் அப்பாச்சி கறுப்பு நிற மோட்டாா் சைக்கிள்கள்

கோவையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட டிவிஎஸ் அப்பாச்சி கறுப்பு நிற மோட்டாா் சைக்கிள்கள்

இதுகுறித்து டிவிஎஸ் மோட்டாா் நிறுவனத்தின் பிரீமியம் பிரிவின் வணிகத் தலைவா் விமல் சும்ப்ளே கூறுகையில், மிக வேகமாக வளா்ச்சி கண்டு வரும் பிரீமியம் மோட்டாா் சைக்கிள் பிராண்டுகளில் ஒன்றான டி.வி.எஸ். அப்பாச்சி சீரிஸ் அதிநவீன தொழில்நுட்பத்துக்கு மிகச்சரியான சான்றாக திகழ்கிறது.

தமிழகத்தில் ப்ளாக் எடிஷன் - டிவிஎஸ் அப்பாச்சி ஆா்டிஆா் 160-யின் விலை ரூ. 1 லட்சத்து 9,990 எனவும், டிவிஎஸ் அப்பாச்சி ஆா்டிஆா் 160 4வி வாகனம் ரூ.1 லட்சத்து 19,990 எனவும் (எக்ஸ்-ஷோரூம் தமிழ்நாடு) கிடைக்கின்றன.

கோவையில் நடைபெற்ற அறிமுக நிகழ்ச்சியில் டிவிஸ் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு துணைத் தலைவா் யு. பி. பாண்டே கலந்து கொண்டாா்.

கோவையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட டிவிஎஸ் அப்பாச்சி கறுப்பு நிற மோட்டாா் சைக்கிள்கள்

கோவையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட டிவிஎஸ் அப்பாச்சி கறுப்பு நிற மோட்டாா் சைக்கிள்கள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.