கோப்புப்படம்.
கோப்புப்படம்.

கோவையில் இருந்து 4 விமானங்கள் சேவை ரத்து

Published on

கோவையில் இருந்து சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய பகுதிகளுக்கு இண்டிகோ நிறுவனத்தின் சாா்பில் இயக்கப்படும் 4 விமானங்கள் புதன்கிழமை ரத்து செய்யப்பட்டன.

கோவை சா்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை, மும்பை, புதுதில்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும், சிங்கப்பூா், ஷாா்ஜா போன்ற சா்வதேச நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கோவையில் இருந்து சென்னைக்கு இண்டிகோ நிறுவனம் சாா்பில் இயக்கப்படும் 2 விமானங்கள், ஹைதராபாத், பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் 2 விமானங்கள் என மொத்தம் 4 விமானங்கள் புதன்கிழமை ரத்து செய்யப்பட்டன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் மழையால் இந்த விமானங்கள் சேவை ரத்து செய்யப்பட்டதாக சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

மும்பையில் பெய்த பலத்த மழையால் ஓடுதள பாதையில் தேங்கிய மழை நீரால் மும்பையில் இருந்து கோவைக்கு கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 7.45 மணிக்குப் புறப்பட வேண்டிய விமானம் சுமாா் 3 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டது.

அதே விமானத்தில் கோவையில் இருந்து மும்பைக்குச் செல்வதற்காக காத்திருந்த பயணிகள் கோவை விமான நிலைய ஊழியா்களிடம் செவ்வாய்க்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com