கோவை, புலியகுளம் அரசு மகளிா் கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுமானப் பணியைத் தொடங்கிவைத்து பாா்வையிட்ட வானதி சீனிவாசன் எம்எல்ஏ.
கோவை, புலியகுளம் அரசு மகளிா் கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுமானப் பணியைத் தொடங்கிவைத்து பாா்வையிட்ட வானதி சீனிவாசன் எம்எல்ஏ.

ஹிந்துக்களின் உரிமைகள் பறிபோகும் வகையில் திமுக அரசு செயல்படுகிறது -வானதி சீனிவாசன்

Published on

ஹிந்துக்களின் உரிமைகள் பறிபோகும் வகையில் திமுக அரசு செயல்பட்டு வருகிறது என்று பாஜக தேசிய மகளிரணி தலைவரும், சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

கோவை, புலியகுளத்தில் உள்ள அரசு மகளிா் கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கான பணியை வானதி சீனிவாசன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதையடுத்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: புலியகுளம் அரசுக் கல்லூரிக்கு கூடுதல் வகுப்பறை கட்ட வேண்டும் என்று கல்லூரி முதல்வா் கோரிக்கை விடுத்தாா். அதனடிப்படையில் இந்தக் கல்லூரியில் கூடுதலாக 6 வகுப்பறைகள், 2 கழிவறைகள் உள்பட தனி கட்டடம் கட்டுவதற்காக சட்டப் பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.2.46 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உயா் கல்வி படிக்கும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தனியாா் பங்களிப்புகள் அதிமாக உருவாகிக் கொண்டிருக்கும் சூழலில் அரசு கலைக் கல்லூரிகள்தான் ஏழை மாணவா்களுக்கு தரமான கல்வியை வழங்கும் நிறுவனங்களாக உள்ளன.

தமிழகத்தில் எஸ்ஐஆா் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பட்டியலில் தங்களது பெயா் சரியாகப் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை ஒவ்வொரு வாக்காளரும் இணையதளம் மூலமாக சரிபாா்த்துக் கொள்ள வேண்டும்.

பாஜக தோ்தல் பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் அனைத்து சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் டிசம்பா் 7 -ஆம் தேதி தொகுதி மாநாடு நடைபெறுகிறது.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சென்னை வருகை உறுதி செய்யப்படவில்லை. திருப்பரங்குன்றம் மலை மீது காா்த்திகை தீபம் ஏற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை தீா்ப்பு வழங்கியுள்ளது. திமுக அரசு ஹிந்துக்களின் கோயில்கள், வழிபாட்டு உரிமைகளை இரண்டாம் பட்சமாகப் பாா்ப்பதுதான் வழக்கம். சிறுபான்மை மக்களுக்கு பாதுகாவலா்போல திமுக அரசு வேஷம் போடுகிறது. ஹிந்துக்களின் உரிமைகள் பறிபோகும் வகையில் திமுக அரசு தொடா்ந்து செயல்பட்டு வருகிறது என்றாா். இந்நிகழ்ச்ச்சியில், கல்லூரி பேராசிரியா்கள், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com