கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 9வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்!

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பற்றி..
தீவிர சோதனையில் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள்
தீவிர சோதனையில் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள்
Published on
Updated on
1 min read

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 9வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் திவிர சோதனை மேற்கொண்டனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுகிறது. மீண்டும் அதேபோன்ற மிரட்டல் 9வது முறையாக வந்து உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நவீன கருவிகள் மூலம் ஒவ்வொரு அறையாக தீவிர சோதனை மேற்கொண்டனர். அலுவலகத்தின் பிரதான கட்டடங்கள், வாகன நிறுத்தும் இடங்கள், பதிவறைகள், கூட்டரங்குகள், பின்புற வளாகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

கடந்த நான்கு மாதங்களில் 9 வது முறையாக ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Bomb disposal experts conducted a thorough search following the 9th bomb threat made at the Coimbatore District Collector's Office.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com