

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளால் கணிக்கப்பட்ட மக்களின் தீர்ப்பு முடிவுகளாக மாறிவருவதாக பிகார் துணை முதல்வரும், லக்கிசராய் தொகுதிக்கான பாஜக வேட்பாளருமான விஜய் குமார் சின்ஹா கூறினார்.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றியைக் கணித்துள்ளன.
இதுதொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு சின்ஹா அளித்த பேட்டியில் கூறியதாவது,
கருத்துக் கணிப்புகள் பொதுமக்களின் தீர்ப்பைப் பிரதிபலிக்கின்றன. எதிர்பார்த்தது இப்போது முடிவுகளாக மாறி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் நிதிஷ் குமார் மீது மக்கள் காட்டிய நம்பிக்கை நாட்டிற்கு வழிகாட்டும். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் காட்டியதை விட எங்கள் முடிவு சிறப்பாக இருக்கும்.
ஆர்ஜேடி தலைவரும் மகாகத்பந்தனின் முதல்வருமான தேஜஸ்வி யாதவ், மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை காடுமையாக சாடிய சின்ஹா, தேவையற்ற சூழலை பரப்புகிறார்கள், எனவே யாரும் அவர்களின் வார்த்தைகளை பெரயதாக எடுத்துக்கொள்வதில்லை.
விஜய் குமார் சின்ஹா பர்ஹியாவில் உள்ள ஜெய் பாபா கோவிந்த் கோயில், ஜக்தம்பா கோயிலில் வழிபாடு செய்தார். இதற்கிடையில், துணை முதல்வர் காலை 10:30 மணி நிலவரப்படி லக்கிசராய் தொகுதியில் முன்னிலை வகித்தார்.
ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி 122 தொகுதிகளின் பாதியை தாண்டியுள்ளது, அதே நேரத்தில் எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணி இந்திய தேர்தல் ஆணையத்தின்படி பின்தங்கியுள்ளது.
229 இடங்களில் முன்னிலையின்படி, என்டிஏ 167 இடங்களில் முன்னிலை வகிக்கிறது, பாரதிய ஜனதா கட்சி 71 இடங்களிலும், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஜனதா தளம் (ஐக்கிய) 72 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. சிராக் பாஸ்வானின் எல்ஜேபி(ஆர்வி) 18 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.