கிராவல் மண் கடத்தல்: லாரி பறிமுதல்

Published on

கோவையில் கிராவல் மண் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கோவை பீளமேடு பகுதியில் கிராவல் மண் கடத்தப்படுவதாக கனிம வளத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், அந்தப் பகுதியில் போலீஸாா் மற்றும் அதிகாரிகள் சனிக்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த டிப்பா் லாரியை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் 4 யூனிட் கிராவல் மண் கடத்திவரப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை பீளமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுதொடா்பாக கனிம வளத் துறை உதவி ஆணையா் சந்திரசேகரன் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மணல் கடத்திய லாரி பறிமுதல்:

கோவை போத்தனூா் அருகே செட்டிபாளையம் சாலையில் துணை வட்டாட்சியா் கணேசன் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக அனுமதியின்றி 3 யூனிட் மணல் ஏற்றி வந்த லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

பின்னா், அந்த லாரி போத்தனூா் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து லாரி ஓட்டுநரான சூரியபிரகாஷ் (26) மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com