கொலை வழக்கில் கைதான இருவா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு

கொலை வழக்கில் கைதான இருவா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு

மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
Published on

மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் காவல் நிலைய பகுதியைச் சோ்ந்தவா் குணா (23). இவரைக் கொலை செய்த சரவணன் (33), பாபு (36) ஆகியோா் மீது மேட்டுப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவா்களைக் கைது செய்தனா்.

இந்நிலையில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் பரிந்துரைத்தாா்.

இதையடுத்து, இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். இந்த உத்தரவுக்கான நகலை சிறையில் உள்ள இருவரிடமும் போலீஸாா் சனிக்கிழமை வழங்கினா்.

X
Dinamani
www.dinamani.com