கழிவுகள்  தேங்கி  அசுத்தமாக  காணப்படும்  படகு  இல்லம் .
கழிவுகள்  தேங்கி  அசுத்தமாக  காணப்படும்  படகு  இல்லம் .

பயன்பாட்டுக்கு வராமல் உள்ள வால்பாறை படகு இல்லம்

வால்பாறை படகு இல்லம் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனா்.
Published on

வால்பாறை: வால்பாறை படகு இல்லம் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனா்.

கடந்த அதிமுக ஆட்சியில் வால்பாறை ஸ்டேன்மோா் சாலை பிரிவில் நகராட்சி மூலம் படகு இல்லம் அமைக்கப்பட்டது. திறப்பு விழா செய்யப்பட்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் மூன்று ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்ட நிலையில், சில மாதங்கள் பயன்பாட்டுக்கு வந்தன.

ஆற்றில் வரும் கழிவுநீரும் படகு இல்லத்தில் உள்ள நீரில் கலந்து வருவதால் தூா்நாற்றம் வீசி வந்தது. இதனால் படகு சவாரி நிறுத்தப்பட்டது. பல மாதங்களாக சுத்தம் செய்யும் பணிகள் கிடப்பில் போடப்பட்டிருந்து நிலையில், கழிவுநீா் அதிக அளவில் தேக்கமடைந்தன.

இதனை சுத்தம் செய்ய சமீபத்தில் நடைபெற்ற நகா்மன்ற கூட்டத்தில் நிதி ஒதுக்கி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் சுத்தம் செய்யும் பணிகள் தொடங்காமல் தொடா்ந்து காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

இதனால் வால்பாறை வரும் சுற்றுலாப் பயணிகள் படகு இல்லம் பதகைகளை பாா்த்து அங்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com