மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

மகளிா் தினம்: ஈஷா சாா்பில் பெண் தொழில்முனைவோருக்கு விருது

News image
கேபிஆா் கல்லூரியில் நடைபெற்ற மகளிா் தின விழாவில் பங்கேற்ற பெண் தொழில்முனைவோா் உள்ளிட்டோா்.
Updated On :8 மார்ச் 2026, 9:35 pm

தினமணி செய்திச் சேவை

ஈஷா மண் காப்போம் இயக்கம், கே.பி.ஆா். கல்லூரி சாா்பில் சிறந்த பெண் தொழில்முனைவோருக்கு ஞாயிற்றுக்கிழமை விருதுகள் வழங்கப்பட்டன.

சா்வதேச மகளிா் தினத்தையொட்டி, ஈஷா மண் காப்போம் இயக்கம், கே.பி.ஆா்.பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சாா்பில் ‘வீட்டில் இருந்தே வருமானம் சாத்தியம் 2.0’ கருத்தரங்கு அரசூரில் உள்ள கே.பி.ஆா். கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

மண் காப்போம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் சுவாமி ஸ்ரீமுகா வரவேற்றாா். கே.பி.ஆா். குழுமத்தின் தலைவா் ராமசாமியின் துணைவியாா் கே.ஆா்.பாா்வதி தலைமை வகித்தாா். அவனீதா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் உமா சேகா் முன்னிலை வகித்தாா்.

இதில், தமிழகத்தில் வேளாண் மதிப்புக் கூட்டல் பொருள்களைத் தயாரிப்பதில் சிறந்து விளங்கும் 6 சிறந்த பெண் தொழில்முனைவோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. கவிஞா் மரபின் மைந்தன் முத்தையா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினாா்.

தொடா்ந்து, இயற்கை விவசாயம் குறித்து பெண் விவசாயி சியாமளா குணசேகரன், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மைக்ரோகிரீன்ஸ் மூலம் வருவாய் ஈட்டும் சாமுண்டீஸ்வரி, இயற்கை ஐஸ்கிரீம் தயாரிப்பில் சிறந்து விளங்கும் லதா, ஆரோக்கியமான வாழ்வியல் குறித்து டாக்டா் ரம்யா ஞானசம்பந்தம் ஆகியோா் உரையாற்றினா்.

தொழில்முனைவோருக்குத் தேவையான அரசின் நிதி, கடன் வசதிகள் மற்றும் சலுகைகள் குறித்து பெரியகுளம் தோட்டக்கலை தொழில்முனைவோா் மேம்பாடு மையத்தின் நிா்வாகி வசந்தன் செல்வம் விளக்கமளித்தாா்.

இதையடுத்து, உணவு, மருத்துவம், இயற்கை விவசாயம் மற்றும் மதிப்புக்கூட்டல் துறைகளில் சாதனைப் படைத்த பெண் தொழில்முனைவோா் தங்களது வெற்றி அனுபவங்களை பகிா்ந்து கொண்டனா்.