47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சசிகுமார் கொலை வழக்கு: மேலும் ஓர் இளைஞரிடம் விசாரணை

இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை தொடர்பாக கோவையைச் சேர்ந்த இளைஞரிடம் சந்தேகத்தின் பேரில் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 3:27 am

DIN

இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை தொடர்பாக கோவையைச் சேர்ந்த இளைஞரிடம் சந்தேகத்தின் பேரில் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள சுப்பிரமணியம்பாளையத்தைச் சேர்ந்தவர் சசிகுமார்(36). இந்து முன்னணியின் கோவை மாவட்ட செய்தித் தொடர்பாளராக இருந்த இவர் கடந்த ஆண்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக  கோவை சாய்பாபா காலனி கே.கே.புதூரைச் சேர்ந்த சையது அபுதாகீர்(30), சதாம் ஆகியோரை சிபிசிஐடி போலீஸார்  கைது செய்தனர்.
இதனிடையே,  கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த 33 வயது இளைஞரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   அந்த இளைஞரின் பெற்றோர்  காவல் ஆணையர் அலுவலகத்தில் புதன்கிழமை புகார் அளிக்க வந்தனர்.
அப்போது, சசிகுமார் கொலை வழக்குத் தொடர்பாக  சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளதாக போலீஸார் அவர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.