ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்புப் பணி கோவையில் திங்கள்கிழமை (ஜூலை 24) தொடங்கியது.
ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதித் தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இரண்டு நாள்களாக நடைபெற்ற இந்தத் தேர்வுகளை கோவையில் 24,500 பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் ஜூன் இறுதியில் வெளியாகின. இதில், கோவை மாவட்டத்தில் 550 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புப் பணி முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி தலைமையில் திங்கள்கிழமை தொடங்கியது.
டவுன்ஹால் சி.எஸ்.ஐ. ஆண்கள் பள்ளியில் தொடங்கிய இந்தப் பணியில் கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்களை சரிபார்த்தனர்.
இதில், பள்ளி இறுதி வகுப்புச் சான்றிதழ்கள், பட்டச் சான்றிதழ்கள் உள்ளிட்ட 12 வகையான சான்றிதழ்கள் சரிபார்க்கப்படுகின்றன. முதல் நாளில் 200 பேர் அழைக்கப்பட்டிருந்த நிலையில் மீதமுள்ளவர்களுக்கு செவ்வாய், புதன்கிழமைகளில் சான்றிதழ் சரிபார்க்கப்படும் என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராணிப்பேட்டை அருகே அரசு வேளாண் பண்ணைகளில் ஆட்சியா் ஆய்வு

ஜோலாா்பேட்டையில் வளா்ச்சிப் பணிகள் : ஆட்சியா் ஆய்வு

காஞ்சிபுரம் கன்னியம்மன் கோயிலில் குங்கும அா்ச்சனை பூஜை

எல்-நினோ தாக்கம்: உணவுப் பாதுகாப்பு, வறட்சி மாநாடு
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview


