குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

கடும் வறட்சியால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

கடும் வறட்சி காரணமாக வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

Updated On :18 ஏப்ரல் 2018, 9:20 am IST

கடும் வறட்சி காரணமாக வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
ஆண்டுதோறும் கோடை விடுமுறைக் காலங்களில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வால்பாறைக்கு வந்து செல்வர். தமிழகத்தில் உள்ள மற்ற மலைப் பகுதியில் இருப்பதுபோல வால்பாறையில் சுற்றுலா வளர்ச்சித் துறை சார்பில் எந்த ஒரு பொழுதுபோக்கு அம்சமும் ஏற்படுத்தப்படவில்லை. 
இப்பகுதியில் உள்ள ஆறுகள், நீர்வீழ்ச்சிக்கு சென்று குளிப்பது இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாகவே வால்பாறையில் கடுமையான வெயில் நிலவி வருவதால், வெப்பம் அதிகரித்துக் காணப்படுகிறது. 
இதன் காரணமாக அனைத்து ஆறுகள்,  நீர்வீழ்ச்சிகள் நீரின்றி வறண்டுள்ளன.  இந்தக் காலநிலை மாற்றம்  வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.