வியாபாரியை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர் கைது

மே தின விழாவுக்கு பணம் தர மறுத்த வட மாநில இளைஞரைத் தாக்கியதாக  ஆட்டோ ஓட்டுநரை போலீஸார்  சனிக்கிழமை கைது செய்தனர். 
Updated on
1 min read

மே தின விழாவுக்கு பணம் தர மறுத்த வட மாநில இளைஞரைத் தாக்கியதாக  ஆட்டோ ஓட்டுநரை போலீஸார்  சனிக்கிழமை கைது செய்தனர். 
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் சஞ்சய்குமார் (28).  இவர்,  கோவை,  வடவள்ளி உழவர் சந்தை அருகே தள்ளுவண்டியில் இட்லிக் கடை நடத்தி வருகிறார்.  இவரது கடைக்கு ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஆனந்த்  (36) என்பவர் சனிக்கிழமை சென்றார்.  அப்போது,  சஞ்சய்குமாரிடம் மே தின விழாவுக்கு ரூ. 15 ஆயிரம் கேட்டுள்ளார்.  ஆனால் அவர் தரமறுத்துள்ளார்.  இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில்ஆத்திரமடைந்த ஆனந்த்,   சஞ்சய்குமாரை தாக்கியுள்ளார். இதுகுறித்து சஞ்சய்குமார் அளித்த புகாரின் பேரில் வடவள்ளி போலீஸார் ஆனந்தைக் கைது செய்தனர்.  அவர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com