எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தினகரன், திவாகரன் கட்சிகள் காணாமல் போய்விடும்

டிடிவி. தினகரன்,  திவாகரன் ஆகியோரின் கட்சிகள் காணாமல் போய்விடும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். 

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 3:21 am

DIN

டிடிவி. தினகரன்,  திவாகரன் ஆகியோரின் கட்சிகள் காணாமல் போய்விடும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். 
சேலத்தில் இருந்து கார் மூலமாக கோவை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்,  தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்  ஆகியோர் எதுகுறித்து  பேச்சுவார்த்தை நடத்தினார்கள் எனத் தெரியவில்லை.  நீங்கள் சொல்லித்தான் எங்களுக்குத் தெரியும்.  துணை ராணுவத்தினர் டெல்டா மாவட்டங்களில் பயிற்சிக்காகவே வந்துள்ளனர். 
 டிடிவி. தினகரன் கட்சி தொடங்கி  சில மாதங்களிலேயே  பிளவு ஏற்பட்டு விட்டது. இந்நிலையில் திவாகரன் தனிக்கட்சி தொடங்கியுள்ளார். இருவரது கட்சிகளும் நீண்ட நாள்களுக்குத் தாக்குப் பிடிக்காது.  விரைவில் இருவரது கட்சிகளும் காணாமல் போய்விடும். 
கர்நாடக தேர்தலில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காததற்கு கட்சித் தலைமையே காரணம் எனக்கூறுவது தவறானது. அங்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இல்லாததால், கேட்ட சின்னம் கிடைக்கவில்லை. காவலர்கள் உயிரிழப்பின்போது வழங்கப்படும் நிதி தடையின்றி வழங்கப்படும். நிறுத்தப்பட்டு விட்டதாகக் கூறுவது தவறான தகவல் என்றார். பேட்டியின்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,  மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ்,  சட்டப் பேரவை உறுப்பினர் வி.சி.ஆறுக்குட்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.