பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பள்ளி மாணவர்களுக்கான விஞ்ஞான அறிவியல் செயல் விளக்க முகாம்

கோவையில் புரொபெல் நிறுவனம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான விஞ்ஞான அறிவியல் செயல் விளக்க முகாம் மே 5 ஆம் தேதி நடைபெறுகிறது.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 3:24 am

DIN

கோவையில் புரொபெல் நிறுவனம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான விஞ்ஞான அறிவியல் செயல் விளக்க முகாம் மே 5 ஆம் தேதி நடைபெறுகிறது.
பள்ளி மாணவர்களின் அறிவியல் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு போதி மரம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் இளம் மாணவர்களுக்கு விஞ்ஞான அறிவை மேம்படுத்துவதற்காக விஞ்ஞான அறிவியல் செயல் விளக்க முகாம் வரும் மே 5- ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து அமைப்பின் நிறுவனர் வித்யா செந்தில்குமார்,  ஏ.வி. குரூப்ஸ் நிறுவனத் தலைவர் ஏ.வி.வரதராஜன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பள்ளி மாணவர்கள் புதிய கண்டுபிடிப்பில் ஆர்வமாக உள்ளனர். அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லாமல் இருப்பதை உணர்ந்து போதிமரம்  என்னும் அமைப்பு கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில்,  இந்த ஆண்டு நடைபெறும் முகாமில் கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 8 வயது முதல் 17 வயது வரையில் இளம் மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த முகாமில் கலந்து கொள்ளும்  மாணவர்களுக்கு விஞ்ஞான அறிவு வளர்ச்சிக்கான அறிவியல் பெட்டகம் வழங்கப்படுகிறது. இதில் கலந்து கொள்ள W​W​W.​L​M​E​S.​C​OM என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.