கோவையில் பிளஸ் 2 மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்டார்.
கோவை, சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ். காலனியை சேர்ந்தவர் மனோஜ்குமார் (20). டிப்ளமோ படித்துள்ள இவர் அதே பகுதியில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயதான பிளஸ் 2 மாணவியைக் காதலித்து வந்துள்ளார். மேலும் அந்த மாணவியைத் திருமணம் செய்து கொள்வதாகக்கூறி பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவி கர்ப்பம் அடைந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் அவரை கேரள மாநிலம், திருச்சூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இதுகுறித்த தகவலின்படி சிங்காநல்லூர் காவல் துறையினர் அங்கு சென்று மாணவியிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதையடுத்து, குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் (போக்ஸோ) வழக்குப் பதிவு செய்து மனோஜ்குமாரை திங்கள்கிழமை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மகுடம் டிரைலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

சித்தார்த் மகாதேவன் அரைசதம்; சேலம் ஸ்பார்ட்டன்ஸுக்கு 196 ரன்கள் இலக்கு!

நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்

இன்றைய தமிழ்நாடு சட்டப்பேரவை 2026 காரசார விவாதம் - நேரலை! (ஆக. 10)
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI


