8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

மாணவி பாலியல் பலாத்காரம்: இளைஞர் கைது

கோவையில் பிளஸ் 2 மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்டார். 

Published On :30 ஜனவரி 2024, 9:57 pm IST

கோவையில் பிளஸ் 2 மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்டார். 
கோவை, சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ். காலனியை சேர்ந்தவர் மனோஜ்குமார் (20).  டிப்ளமோ படித்துள்ள இவர் அதே பகுதியில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். 
இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயதான பிளஸ் 2 மாணவியைக் காதலித்து வந்துள்ளார். மேலும் அந்த மாணவியைத் திருமணம் செய்து கொள்வதாகக்கூறி பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவி கர்ப்பம் அடைந்துள்ளார். 
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் அவரை கேரள மாநிலம், திருச்சூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதித்துள்ளனர்.  
இதுகுறித்த தகவலின்படி சிங்காநல்லூர் காவல் துறையினர் அங்கு சென்று மாணவியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். 
இதையடுத்து, குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் (போக்ஸோ) வழக்குப் பதிவு செய்து மனோஜ்குமாரை திங்கள்கிழமை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.