கோவை கே.பி.ஆர் ஐஏஎஸ் அகாதெமியில் பயிற்சி பெற்ற 7 பேர் இந்திய குடிமைப் பணிகள் தேர்வின் முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதுதொடர்பாக கே.பி.ஆர் ஐஏஎஸ் அகாதெமியின் மேலாண்மை இயக்குநர் கே.பி.டி.சிகாமணி கூறியதாவது:
கே.பி.ஆர் ஐஏஎஸ் அகாதெமி சார்பில் இந்திய குடிமைப் பணித் தேர்வில் பங்குபெறும் மாணவர்களுக்குப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் அகாதெமியில் பயிற்சி பெற்ற 6 பேர் அகில இந்திய அளவில் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் நடப்பாண்டுக்கான முதன்மைத் தேர்வு முடிவுகள் டிசம்பர் 20 ஆம் தேதி வெளியிடப்பட்டன. இதில் கேபிஆர் அகாதெமியில் பயிற்சி பெற்ற எஸ்.பிரேம்குமார், பி.பிரபினா, எஸ்.தமிழ் ஓவியா, எஸ்.சந்தோஷ் குமார், எம்.ராம் சுந்தர், எம்.நிஷாந்த் குமார், கே.புவனி உள்ளிட்ட 7 பேர் தேர்ச்சி பெற்றனர். முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள 7 பேருக்கும் நேர்முகத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட உள்ளன என்றார். கோவை காந்தி பூங்கா தடாகம் சாலையில் உள்ள கேபிஆர் ஐஏஎஸ் அகாதெமியில் பயிற்சியில் சேர்வதற்கு 7171911133/0422-2478090 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என்று அறிவிக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








