கோவையில் சர்வதேச அளவிலான கிரிக்கெட் மைதானம் அமைக்க முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
உக்கடம் ஆடு அறுவைமனை அருகில் மாநகராட்சி தினசரி மொத்தம் மற்றும் சில்லறை மாங்காய் மற்றும் பழங்கள் மார்க்கெட்டின் புதிய கட்டடத்தை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:
புதிய மார்க்கெட் வளாகத்தில் மொத்தம் 24 கடைகள் உள்ளன. இந்தக் கடைகளுக்கு மிகவும் குறைந்த அளவிலான மாத வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்துக்கு மேம்பாலம், 24 மணி நேரம் குடிநீர் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன. பல ஆண்டுகள் இல்லாத வளர்ச்சியை தற்போது கோவை அடைந்துள்ளது.
தொண்டாமுத்தூர் மற்றும் அனைத்துப் பகுதிகளிலும் சாலைகள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவையில் சர்வதேச அளவிலான கிரிக்கெட் மைதானம் அமைக்க முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த நிகழ்ச்சியில், ஆட்சியர் த.ந.ஹரிஹரன், கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யா, தெற்கு சட்டப் பேரவை உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுணன், மாநகராட்சி பழம் காய்கறி வியாபாரிகள் நலச்சங்க துணைசெயலாளர் பைசல், மன்சூர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கிரிக்கெட் வீரராக நடிக்கும் ஜிவி பிரகாஷ்!

நெசவாளர்களுக்கு ரூ. 10 லட்சம் காப்பீடு: விஜய் வாக்குறுதி

ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தையின் இரண்டாம் சுற்று அடுத்த வாரம் நடைபெறுமா?

இந்தியன் சூப்பர் லீக்கில் இனவெறி தாக்குதல்..! இந்திய கால்பந்து சம்மேளனம் கண்டனம்!
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு

