வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

ராசிபுரத்தில் கடவுச்சீட்டு சேவை மையம் மே 18 இல் தொடக்கம்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் கடவுச்சீட்டு சேவை மையம் (பாஸ்போர்ட் கேந்திரா) மே 18-ஆம் தேதி தொடங்கப்படுகிறது.

News image
Updated On :14 மே 2018, 7:39 pm

DIN

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் கடவுச்சீட்டு சேவை மையம் (பாஸ்போர்ட் கேந்திரா) மே 18-ஆம் தேதி தொடங்கப்படுகிறது.
கோவை மண்டல கடவுச்சீட்டு மையத்துக்கு உள்பட்டு இருந்த நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக கடவுச்சீட்டு சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் மே 18-ஆம் தேதி முதல் செயல்பட உள்ளது. எனவே, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் கடவுச்சீட்டு பெற இச்சேவை மையத்தை அணுகலாம்.
கடவுச்சீட்டு பெற ராசிபுரம் தபால் அலுவலகத்தில் முன் அனுமதி பெறலாம். புதிய கடவுச்சீட்டுகள் மற்றும் மறு விநியோக கடவுச்சீட்டுகள் மட்டுமே வழங்கப்படும். தத்கல் முறையில் விண்ணப்பிக்கப்படும் கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.
ராசிபுரத்தில் தொடங்கப்பட உள்ள சேவை மையத்தில் நாள்தோறும் 50 விண்ணப்பங்கள் ஏற்கப்படும். இது, தமிழகத்தில் 10-ஆவது கடவுச்சீட்டு மையம் ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.