/

சாலை விபத்தில் இளைஞர் சாவு

சூலூர் அருகே புதன்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.

Updated On :25 மே 2018, 4:26 am IST

சூலூர் அருகே புதன்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.
கோவை, காளப்பட்டி, ஜீவா நகரைச் சேர்ந்த அர்த்தநாரி மகன் மோகன் (24). கட்டடப் பொறியாளராகப் பணியாற்றி வந்தார்.
இவர், தனது இருசக்கர வாகனத்தில் சூலூர் அருகே உள்ள பீடம்பள்ளிக்கு சென்று விட்டு புதன்கிழமை இரவு வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்தார். நாகமநாயக்கன்பாளையம் அருகே வந்தபோது, வாகனம் நிலை தடுமாறியதில் கீழே விழுந்துள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து சூலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.