கோவை, நீலிகோணாம்பாளையம் அருகே ஆட்டோவில் சென்ற தம்பதியை மிரட்டி 5 பவுன் நகையை பறித்துச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது:
கோவை, நீலிகோணாம்பாளையம் மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் கோபால் (61). இவர் விவசாயத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சாந்தாமணி (51). இவர்கள் இருவரும் நண்பர் வீட்டு திருமணத்துக்காக சில நாள்களுக்கு முன் திருக்கடையூர் சென்றுள்ளனர். இதன் பிறகு சனிக்கிழமை நள்ளிரவு பேருந்தில் கோவை திரும்பியுள்ளனர். பின்னர் ஒண்டிப்புதூரில் இறங்கி ஆட்டோவில் நீலிக்கோணாம்பாளையம் சென்றுள்ளனர். அப்போது இவர்கள் சென்ற ஆட்டோவை இருவர் வழிமறித்துள்ளனர். மேலும், கோபால், சாந்தாமணியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி இருவரும் அணிந்திருந்த 5 பவுன் நகையைப் பறித்து விட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து சாந்தாமணி கொடுத்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








