எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, நவக்கரை ரேஸ் கிளப் சார்பில் கோவையை அடுத்த மதுக்கரையில் ரேக்ளா பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மதுக்கரையை அடுத்த எட்டிமடை, காளியாபுரம் அருகே நடைபெற்ற இந்த பந்தயம் 200 மற்றும் 300 மீட்டர் என இரண்டு சுற்றுகளாக நடத்தப்பட்டது.
இதில் 350-க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் வீரர்கள் பங்கேற்றனர். சமுக ஆர்வலர் அன்பரசன் ரேக்ளா பந்தயத்தை கொடியசைத்து துவக்கிவைத்தார். 200 மீட்டர் போட்டியில் கோவை வீரப்பனூரைச் சேர்ந்த அன்பு தினேஷ் முதலிடம் பெற்றார். பொள்ளாச்சியைச் சேர்ந்த ஈஸ்வரன் இரண்டாமிடம் வென்றார். 300 மீட்டர் போட்டியில் பொள்ளாச்சியைச் சேர்ந்த ஆறுச்சாமி முதல் பரிசையும், பெரிய முத்துசாமி இரண்டாம் பரிசையும் பெற்றனர்.
இதன் துவக்க நிகழ்ச்சியில் கிணத்துக்கடவு சட்டப் பேரவை உறுப்பினர் எட்டிமடை சண்முகம், முன்னாள் ஒன்றியத் தலைவர் மகாலிங்கம், பொதுமக்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தங்க நாணயம் மற்றும் கோப்பைகளை வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







