வால்பாறை நகரை ஒட்டியுள்ள பகுதிக்கு வந்த யானைகள் அங்குள்ள வாழைமரங்களை சேதப்படுத்தி சென்றன.
வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இரவு நேரத்தில் வரும் யானைகள் எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகளை சேதப்படுத்துவது வழக்கமாகிவிட்டன.
இந்நிலையில், வால்பாறை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பகுதிக்கு திங்கள்கிழமை இரவு வந்த 2 யானைகள் அங்கு முகமது என்பவருக்கு சொந்தமான வாழைத் தோட்டத்துக்குள் புகுந்து ஏராளமான வாழைமரங்களை சேதப்படுத்தி சென்றன.
இதேபோல் எஸ்டேட்டில் பல்வேறு பகுதிகளிலும் யானைகளால் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







