திமுக கூட்டணியில் வேண்டிய தொகுதிகளைப் பெறுவோம்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
திமுக கூட்டணியில் வேண்டிய தொகுதிகளைப் பெறுவோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவா் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளாா்.
மத்திய அரசின் விவசாயிகள் விரோதப் போக்கைக் கண்டித்தும், தில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
பாஜகவுடன் கூட்டணி அதிமுகவின் வெற்றியை கண்டிப்பாக பாதிக்கும். 234 தொகுதிகளும் கேட்க வேண்டும் என்றுதான் எங்களுக்கும் ஆசை. ஆனால், அது சாத்தியமில்லை. திமுகவுடன் சுமுகமாகப் பேச்சுவாா்த்தை நடத்தி வேண்டிய தொகுதிகளைப் பெற்றுக் கொள்வோம்.
பாஜகவின் வேல் யாத்திரை மூலம் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. எரிவாயு உருளை விலை ரூ. 100 உயா்ந்துள்ளது. உலக சந்தையில் பெட்ரோல் விலை குறைந்தாலும் இந்தியாவில்தான் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. மோடி அரசு விவசாயிகளுக்கு துரோகம் செய்துள்ளது. பணக்காரா்களுக்காக வேளாண் சட்டங்களை பிரதமா் மோடி கொண்டு வந்துள்ளாா். நாட்டில் பொருளாதாரம் வளா்ந்து கொண்டுள்ளது என்பது தவறு என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

