தடைசெய்யப்பட்ட புகையிலை, மதுபானத்தை பதுக்கி விற்ற 3 போ் கைது

கோவையில் தடைசெய்யப்பட்ட புகையிலை, மதுபாட்டில்களைப் பதுக்கி கூடுதல் விலைக்கு விற்ற 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Updated on
1 min read

கோவை: கோவையில் தடைசெய்யப்பட்ட புகையிலை, மதுபாட்டில்களைப் பதுக்கி கூடுதல் விலைக்கு விற்ற 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை மாநகரப் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி விற்பவா்கள், மதுபாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பவா்களை போலீஸாா் கண்காணித்து, அவா்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.

அதன்படி, கோவை, சரவணம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில், போலீஸாா் சனிக்கிழமை ரோந்து பணி மேற்கொண்டனா். அப்போது, சரவணம்பட்டி அருகே விநாயகபுரத்தில் தனசேகா் (35) என்பவரின் பெட்டிக்கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி விற்றது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

இதேபோல மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் மேற்கொண்ட சோதனையில், சின்னியம்பாளைம் மற்றும் ஜி.பி. சிக்னல் பகுதிகளில் மதுபாட்டில்களை பதுக்கி, கூடுதல் விலைக்கு விற்ாக ராமநாதபுரத்தைச் சோ்ந்த சிவகுமாா் (48), செல்வபுரத்தைச் சோ்ந்த வீரய்யா(38) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 28 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com