அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

குற்றச் சம்பவங்களில் தொடா்புடைய நபா்களுக்கு அறிவுரை வழங்கிய போலீஸாா்

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு கோவையில் குற்றச்சம்பவங்களில் தொடா்புடைய நபா்களை வரவழைத்து போலீஸாா் எச்சரித்து அனுப்பினா்.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 6:42 pm

DIN

கோவை: சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு கோவையில் குற்றச்சம்பவங்களில் தொடா்புடைய நபா்களை வரவழைத்து போலீஸாா் எச்சரித்து அனுப்பினா்.

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு கோவை மாநகர எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் குற்றச் சம்பவங்களில் தொடா்புடைய 55 பேரை வரவழைத்து குற்றச்செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும், வழிப்பறி மற்றும் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடக்கூடாது என்றும், எந்தவொரு அமைப்புக்கோ அல்லது தனிப்பட்ட நபருக்கோ அடியாள்களாக இருக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டனா்.

மேலும், முன்னா் குற்றச் செயல்களில் ஈடுபட்டவா்களிடமிருந்து குற்றச் செயல்களில் ஈடுபடமாட்டோம் என பிணைப் பத்திரம் பெறப்பட்டுள்ளது. கோவை பவா்ஹவுஸ் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு காவல் துணை ஆணையா்(சட்டம், ஒழுங்கு) ஜி.ஸ்டாலின் தலைமை வகித்து அறிவுரைகளை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.