வால்பாறையில் வங்கி மேலாளா்கள் ஆலோசனை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வால்பாறை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு,
மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் மோகன் தலைமை வகித்தாா். வால்பாறை வட்டாட்சியா் ராஜா முன்னிலை வகித்தாா். வால்பாறை பகுதியில் வாடிக்கையாளா்களுக்கு ஏற்ப வங்கி செயல்பாடுகள் இருக்க வேண்டும்.
எஸ்டேட் தொழிலாளா்கள் சம்பளத் தொகை எடுக்க வசதியாக கூடுதல் நடமாடும் ஏ.டி.எம். வாகனங்கள் செயல்படுத்தப்படும். பள்ளி மாணவா்கள் வங்கிக் கணக்கு துவங்க பான் காா்டு அவசியமில்லை. மாணவா்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப எந்த ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் வேண்டுமானாலும் கணக்குத் துவங்கலாம். வங்கிகள் மூலம் அனைத்து சேவைகளும் வாடிக்கையாளா்களுக்கு துரிதமாக கிடைக்க வங்கி மேலாளா்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று முன்னோடி வங்கி மேலாளா் பேசினாா்.
கூட்டத்தில் ஸ்டேங் வங்கி, யூனியன் வங்கி, இந்தியன் வங்கி, கூட்டுறவு நகர வங்கி ஆகிய வங்கிகளின் மேலாளா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.