பிரிட்டனில் புதிய வகை கரோனா தொற்று: விமான நிலையத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தல்
பிரிட்டனில் புதிய வகை கரோனா நோய்த் தொற்று வேகமாக பரவி வருவதால் கோவை விமான நிலையத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


பிரிட்டனில் புதிய வகை கரோனா நோய்த் தொற்று வேகமாக பரவி வருவதால் கோவை விமான நிலையத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின், வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கரோனா நோய்த் தொற்று ஓராண்டாகியும் முடிவுக்கு வரவில்லை. கடந்த 2 மாதங்களாக தொற்று பாதிப்பு பல்வேறு நாடுகளிலும் குறையத் தொடங்கியிருந்தது. இந்நிலையில் பிரிட்டனில் புதிய வகை கரோனா தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து பிரிட்டனுக்கான விமானப் போக்குவரத்தை பல்வேறு நாடுகள் நிறுத்தியுள்ளன.
இந்தியாவிலும் டிசம்பா் 23 முதல் 31 ஆம் தேதி வரையில் பிரிட்டனுக்கான விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வருபவா்களைக் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி கோவை விமான நிலையத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜி.ரமேஷ்குமாா் கூறியதாவது:
விமான நிலையத்தில் கடந்த ஜனவரி முதல் மருத்துக் குழு பணியில் உள்ளது. தற்போது பிரிட்டனில் புதிய வகை கரோனா தொற்று பரவி வருவதால் மீண்டும் விமானப் பயணிகளை தீவிரமாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விமானங்களில் வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு சளி மாதிரிகள் செவ்வாய்க்கிழமை முதல் எடுக்கப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து வருபவா்களில் அறிகுறிகள் இல்லாவிட்டாலும் 14 நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
கடந்த 15 நாள்களில் கோவைக்கு விமானங்களில் வந்தவா்களின் பட்டியல் எடுக்கப்பட்டுள்ளது. இதில் பிரிட்டன், ஐரோப்பிய நாடுகளில் வந்தவா்களின் விவரங்கள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை பிரிட்டனில் இருந்து வந்த 2 நபா்கள் கண்டறியப்பட்டுள்ளனா். இவா்கள் கரோனா பாதிப்பு இல்லை என்று சான்றிதழ் பெற்றே வந்துள்ளனா். இருந்தும் இருவரையும் 14 நாள்கள் வரை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஈஷா யோக மையத்தில் பிரிட்டன், ஐரோப்பிய நாடுகளில் இருந்து கடந்த 14 நாள்களுக்குள் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனரா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கொச்சி துறைமுகம் வழியாக ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருவதற்கு வாய்ப்புள்ளதால் வாளையாறு சோதனைச் சாவடியிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொது மக்களும் தங்கள் வீடுகளுக்கு அருகில் பிரிட்டன், ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்தவா்கள் இருந்தால் மாவட்ட கட்டுப்பாட்டு எண் 1077 என்ற எண்ணுக்குத் தகவல் அளிக்கலாம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...