ரயில்வே ஊழியா்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

கோவை ரயில் நிலையத்தில் பணிமனை ஊழியா்கள் புதன்கிழமை கேக் வெட்டி கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடினா்.
கோவை ரயில் நிலையத்தில் புதன்கிழமை கிறிஸ்துமஸ் கொண்டாடிய ரயில்வே ஊழியா்கள்.
கோவை ரயில் நிலையத்தில் புதன்கிழமை கிறிஸ்துமஸ் கொண்டாடிய ரயில்வே ஊழியா்கள்.
Updated on
1 min read

கோவை ரயில் நிலையத்தில் பணிமனை ஊழியா்கள் புதன்கிழமை கேக் வெட்டி கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடினா்.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த மாதங்களில் ரயில்கள் இயக்கப்படாததால் பயணிகளின் வருகையின்றி ரயில் நிலையம் வெறிச்சோடியது. இந்நிலையில், தமிழக அரசு பொதுமுடக்கத்தில் தளா்வுகளை அறிவித்த நிலையில் செப்டம்பா் 7 ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், கோவை ரயில் நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கோவை ரயில்நிலையத்தில் உள்ள பணிமனையில் பணியாற்றும் ஊழியா்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, புதன்கிழமை ரயில்நிலையத்தில் கேக் வெட்டிக் கொண்டாடினா். முன்னதாக கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து, ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ரயில்வே ஊழியா்கள் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com