மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பொதுத்தேர்வு எழுத, தேர்வு மையங்களுக்கு செல்லும் மாணவ, மாணவியருக்கு இலவச ஆட்டோ வசதி

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத, தேர்வு மையங்களுக்கு செல்லும் மாணவ, மாணவியருக்கு இலவச ஆட்டோக்கள் இயக்க கோவையில் விஜய் ரசிகர்கள் முன்வந்துள்ளனர்.

News image
Updated On :8 ஜூன் 2020, 9:31 am

DIN

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத, தேர்வு மையங்களுக்கு செல்லும் மாணவ, மாணவியருக்கு, இலவச ஆட்டோக்கள் இயக்க கோவையில் விஜய் ரசிகர்கள் முன்வந்துள்ளனர்.

நடிகர் விஜயின் பிறந்த நாள் விழா இந்த மாதம் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கோவை மாவட்ட நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் மாணவரணி சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் கடந்த நான்கு ஆண்டுகளாக நடிகர் விஜய் பிறந்த ஜூன் மாதம் முழுவதும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஆட்டோ சேவையை வழங்கி வருகின்றனர். 

இந்நிலையில் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக இலவச ஆட்டோ சேவை துவக்க விழா கோவையில் நடைபெற்றது. இதனை ஜே.ஆர்.டி.குழுமத்தின் தலைவர் ராஜேந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் கோவையின் முக்கிய பகுதிகளில் பத்து ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டு அதில் விஜய் மக்கள் இயக்கத்தின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.  

முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இயக்கப்பட்ட இந்த இலவச சேவை, இந்த ஆண்டு, கொரோனா வைரஸ் பரவலால்,  பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதச் செல்லும் மாணவ, மாணவியர் தேர்வு மையங்களுக்கு செல்லவும் இயக்க உள்ளதாக விஜய் மக்கள் இயக்கத்தின் மாணவரணி தலைவர் பாபு தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.