கோவையில் சிஐடியூ சார்பில் ஆட்சியரிடம் மனு 

அனைத்து வாகனங்களுக்குரிய கட்டணங்களை கட்டுவதற்கு பிச்சையெடுக்க அனுமதிக்ககோரி சிஐடியூ சார்பில் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவையில் சிஐடியூ சார்பில் ஆட்சியரிடம் மனு 

அனைத்து வாகனங்களுக்குரிய கட்டணங்களை கட்டுவதற்கு பிச்சையெடுக்க அனுமதிக்ககோரி சிஐடியூ சார்பில் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

வாகன ஒட்டுநர்களுக்கு மத்திய மாநில அரசுகளுக்கு நிவாரணம் கேட்டு பல மனுக்கள் அளித்தும் இதுவரைக்கும் அரசு நடவடிக்கை  எடுக்கவில்லை. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மத்திய மாநில அரசுகள் உடனடியாக நிவாரணம், வாகன கட்டண ரத்து உள்ளிட்ட எட்டுக்கோரிக்களை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.  அனைத்து வாகன கடன்களுக்கான ஆறு மாத தவணை வட்டியை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும்,  2021 ஆம் ஆண்டு வரை வாகன காப்பீடு கட்டணத்தை வசூல் செய்யக்கூடாது என வலியுறுத்தினர். 

வாகனத்திற்கான தரச் சான்றிதழை பெறுவதற்கு, வாகனங்களில் பொருத்தியுள்ள வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் மூலம் தரச்சான்றிதழை வழங்க வேண்டும். நவீன முறையில் படம் பிடித்து பணம் பறிக்கும் காவல்துறையின் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும், கரோனா வைரஸ் காலத்தில் நிவாரணமாக மாதம் 7,500 ரூபாய் அனைத்து ஓட்டுநர்களுக்கும் மார்ச் முதல் மே மாதத்திற்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். வாகனங்கள் இயங்காத காலத்தில் வரிகளை கேட்கக்கூடாது என மோட்டர் வாகன சட்ட விதி இருக்கிறது. 

இந்நிலையில் ஊரடங்கு முடியும்வரை வாகனங்களுக்கான பர்மிட், ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல் போன்றவற்றில் இருந்து விலக்கு அளிக்ககவும் கோரிக்கை விடுத்தனர். ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவைகளுக்காக வாகனங்களை இயக்கி விபத்தில் மரணமடைந்த ஓட்டுநர்களுக்கு 10 லட்ச ரூபாயும், எலும்பு முறிவு ஏற்பட்டவர்களுக்கு 5 லட்ச ரூபாயையும் உடனடியாக அரசு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுனர். இதனையடுத்து அனைத்து வாகன கட்டணங்களையும்  கட்டுவதற்கு, பிச்சையெடுக்க அனுமதிக்க வேண்டி ஆட்சியரிம் மனு அளித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com