தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

செங்கல் சூளை தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கு அனுப்பிவைக்க வலியுறுத்தி போராட்டம்

பெரியபாளையம் அருகே செங்கல் சூளை தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்க வலியுறுத்தி இரவில் பேராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :9 ஜூன் 2020, 2:25 am

DIN

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் செங்கல் சூளையில் ஒடிசாவை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வந்தனர். 

கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு கடந்த 70 நாள்களாக அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளதால் கூலி தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். 

இந்நிலையில் செங்கல் சூளையில் பணியாற்றி வந்த 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திடீரென தங்களது பொருள்களை மூட்டை கட்டிக்கொண்டு ஊருக்கு புறப்பட்டு செல்ல வேண்டும் எனக்கூறி இரவிலும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Story image

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் பொது முடக்கம் காரணமாக போக்குவரத்து இல்லாததால் உரிய அனுமதி பெற்ற பின்னரே சொந்த மாநிலத்திற்கு திரும்ப முடியும் எனவும், அதுவரையில் செங்கல் சூளையிலேயே தங்கி இருக்குமாறு அறிவுறுத்தினர். 

இதனையடுத்து தொழிலாளர்கள் மீண்டும் செங்கல் சூளைக்கு திரும்பினார். மூட்டை, முடிச்சுகளுடன் சொந்த மாநிலத்திற்கு செல்ல வேண்டும் என வடமாநில தொழிலாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.