மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கோவையில் 6 வழித்தடத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 6 வழித்தடத்தில் சிறப்பு பேருந்துகள் திங்கள்கிழமை இயக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :18 மே 2020, 9:44 am

DIN

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 6 வழித்தடத்தில் சிறப்பு பேருந்துகள் திங்கள்கிழமை இயக்கப்பட்டுள்ளன.

கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக 4 ஆம் கட்ட பொது முடக்கம் மே 31 வரை அறிவிக்கப்பட்டுள்ளது ஏற்கனவே  அறிவிக்கப்பட்ட 3 ஆம் கட்ட பொது முடக்கம் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிந்த நிலையில் திங்கள்கிழமை முதல் கோவை உள்பட 25 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையொட்டி அரசு ஊழியர்கள் பணிக்கு செல்லும் வகையில் போக்குவரத்துக் கழகம் சார்பில் திங்கள்கிழமை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி கோவை மண்டலத்துக்குள்பட்ட கோவை கோட்டத்தில் 6 சிறப்பு பேருந்துகள் திங்கள்கிழமை இயக்கப்பட்டன. 

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், அன்னூர், கருமத்தம்பட்டி, வடவள்ளி, தீத்திப்பாளையம் ஆகிய வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.