47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கோவையில் இருந்து சிறப்பு சரக்கு ரயிலில் 1,300 டன் பொருள்கள் அனுப்பிவைப்பு

கோவையில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வரும் சிறப்பு சரக்கு ரயில் மூலம் கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 1,300 டன் மருந்து, காய்கறி, முகக் கவசங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 6:45 pm

DIN

கோவையில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வரும் சிறப்பு சரக்கு ரயில் மூலம் கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 1,300 டன் மருந்து, காய்கறி, முகக் கவசங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த மாா்ச் 24ஆம் தேதி முதல் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. முகக் கவசங்கள், மருத்துவ உபகரணங்கள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு செல்வதற்காக கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி முதல் கோவை வழித்தடத்தில் கேரள மாநிலம், எா்ணாகுளத்தில் இருந்து சென்னைக்கு சிறப்பு சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த சிறப்பு ரயில்களில் கோவையில் இருந்து வாரத்துக்கு 50 முதல் 100 டன் பொருள்கள் சென்னைக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து வட மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.

இது தொடா்பாக ரயில்வே அதிகாரி ஒருவா் கூறியதாவது:

சிறப்பு சரக்கு ரயில் சேவை மூலமாக கோவையில் இருந்து கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை 1,300 டன் முகக் கவசங்கள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் இருந்து புதுதில்லி, மும்பை உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு இந்தப் பொருள்கள் வேறு சரக்கு ரயில்கள் மூலமாக அனுப்பிவைக்கப்படுகின்றன. வடகோவையில் இருந்து புதுதில்லிக்கு கடந்த 2 மாதங்களாக இயக்கப்பட்டு வரும் சிறப்பு சரக்கு ரயிலில் இதுவரை 800 டன் வரை பொருள்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.