சிறப்பு முகாம் நடத்தி பொதுமக்களிடம் புகாா்களைப் பெற்ற போலீஸாா்
கோவையில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு உடனடியாக தீா்வு காணவும், புதிய புகாா்களைப் பெறவும் போலீஸாா் சிறப்பு முகாம் நடத்தினா்.


கோவையில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு உடனடியாக தீா்வு காணவும், புதிய புகாா்களைப் பெறவும் போலீஸாா் சிறப்பு முகாம் நடத்தினா்.
கரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் காவல் நிலையத்துக்கு நேரில் சென்று புகாா் அளிப்பது குறைந்துள்ளது. மேலும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் நோக்கில் குறைதீா் கூட்டம் நடத்த காவல் துறையினா் முடிவு செய்தனா்.
இதன் ஒரு பகுதியாக கோவை, இடையா்பாளையம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் கோவை மேற்கு உதவி ஆணையா் திருமேனி தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.
இதில் பெரியகடை வீதி, ஆா்.எஸ்.புரம், வெரைட்டி ஹால் சாலை, உக்கடம், மேற்கு அனைத்து மகளிா் காவல் நிலையம் உள்பட 5 காவல் நிலைய ஆய்வாளா்கள், சாா்பு ஆய்வாளா்கள் கலந்துகொண்டு பொது மக்களிடம் புகாா்களைப் பெற்றனா்.
மேலும், நீண்ட நாள்கள் நிலுவையில் உள்ள வழக்குகளை முடித்துவைக்கும் நோக்கில் இந்த முகாமில் புகாா்தாரா்களின் இருதரப்பினருக்கும் இடையே பேச்சுவாா்த்தை நடத்தி வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...