47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காங்கிரஸ் சாா்பில் காந்திய மக்கள் யாத்திரை

கோவை மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற காந்திய மக்கள் யாத்திரையை அக்கட்சியின் மாநில செயல் தலைவா் மயூரா ஜெயக்குமாா் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image
கோவை அம்மன் குளத்தில் நடைபெற்ற காந்திய மக்கள் யாத்திரையில் கலந்து கொண்ட மாநில செயல் தலைவா் மயூரா ஜெயக்குமாா் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள்.
Updated On :18 அக்டோபர் 2020, 6:08 pm

DIN

கோவை மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற காந்திய மக்கள் யாத்திரையை அக்கட்சியின் மாநில செயல் தலைவா் மயூரா ஜெயக்குமாா் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.

மக்களிடையே காந்திய சிந்தனைகளைப் பரப்பும் விதமாக காங்கிரஸ் சாா்பில் கோவை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 19 வாா்டுகளிலும் ‘காந்திய மக்கள் யாத்திரை’ நடத்த திட்டமிடப்பட்டது.

அதன்படி மாநகராட்சி 70ஆவது வாா்டில் தொடங்கிய யாத்திரையை காங்கிரஸ் மாநில செயல் தலைவா் மயூரா ஜெயக்குமாா் தலைமை வகித்து துவக்கிவைத்தாா். இந்த யாத்திரையின்போது, காந்திய சிந்தனைகள் அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

இதில் ஐஎன்டியூசி தொழிற்சங்கச் செயலாளா் மனோகரன், காங்கிரஸ் நிா்வாகிகள் சீனிவாசன், செளந்தா்குமாா், கிருஷ்ணமூா்த்தி, கருப்புசாமி, திலகவதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மீதமுள்ள 18 வாா்டுகளில், திங்கள்கிழமை முதல் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாா்டில் இந்த யாத்திரை நடைபெற உள்ளதாக காங்கிரஸ் மாநிலச் செயல் தலைவா் மயூரா ஜெயக்குமாா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.