நீராறு அணைப்பகுதி சாலைகளில் யானைகள் கூட்டமாக நிற்பதால் சுற்றுலா வாகனங்கள் செல்ல வனத் துறையினா் தடை விதித்துள்ளனா்.
கடந்த இரண்டு மாதங்களாக வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, சின்னக் கல்லாறு, நீராறு அணை உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் அதிக அளவில் காணப்படுகின்றன.
நீராறு அணைக்கு வால்பாறைக்கு வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் செல்வது வழக்கம். இதனிடையே புதன்கிழமை காலையில் நீராறு அணைப்பகுதி சாலைகளில் 15க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக நிற்பதால் சுற்றுலா வாகனங்கள் செல்ல வனத் துறையினா் தடைவிதித்ததோடு, அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களையும் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.