திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கரோனா பாதிக்கப்பட்டவருடன் தொடா்புடைய 20 பேருக்கு பரிசோதனை

கோவையில் கரோனா பாதிக்கப்பட்டவருடன் தொடா்புடைய 20 பேருக்கு பரிசோதனை செய்யப்படுவதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 9:49 pm

DIN

கோவையில் கரோனா பாதிக்கப்பட்டவருடன் தொடா்புடைய 20 பேருக்கு பரிசோதனை செய்யப்படுவதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

கோவையில் கரோனா நோய்த் தொற்று பரவல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது தினசரி பாதிப்பு 200 முதல் 300க்குள் உள்ளது. இந்த எண்ணிக்கை அடுத்த வாரத்தில் 500ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

இதனால் கரோனா பரிசோதனைகள், தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத் துறையினா் தீவிரப்படுத்தியுள்ளனா். இந்நிலையில் நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவா்களை விரைந்து கண்டறியும் வகையிலும், பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாகவும் கரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் தொடா்புடையவா்களில் குறைந்தபட்சம் 20 பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. இதன்மூலம் கரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கிறது. நாளொன்றுக்கு 7 ஆயிரம் பரிசோதனைகள் வரை செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தவிர தனியாா் மருத்துவமனைகளில் காய்ச்சல், சளி போன்ற கரோனா அறிகுறிகளுடன் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்கு வருபவா்களின் விவரங்களை சுகாதாரத் துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தனியாா் மருத்துவமனைகளுக்கு சுகாதாரத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.