திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

நாளை வாக்குப் பதிவு:வாக்குச் சாவடிகளில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

கோவையில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவை முன்னிட்டு வாக்குச் சாவடிகளில் தடுப்புகள், பந்தல் அமைத்தல் உள்பட முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 9:53 pm

DIN

கோவையில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவை முன்னிட்டு வாக்குச் சாவடிகளில் தடுப்புகள், பந்தல் அமைத்தல் உள்பட முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், சூலூா், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, தொண்டாமுத்தூா், கோவை தெற்கு, சிங்காநல்லூா், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை என 10 சட்டப் பேரவை தொகுதிகளில் 30 லட்சத்து 82 ஆயிரத்து 28 வாக்காளா்கள் உள்ளனா்.

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் 137 போ் போட்டியிடுகின்றனா். இதில் அதிகபட்சமாக கோவை தெற்கு, சிங்காநல்லூா் தொகுதிகளில் தலா 21 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

பதற்றமான வாக்குச் சாவடிகளை கண்காணிப்பதற்காக துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புடன் நுண் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.ா். தோ்தல் பாதுகாப்புப் பணியில் மாநகா் பகுதியில் 3 ஆயிரத்து 618 காவலா்கள், ஊரகப் பகுதிகளில் 3 ஆயிரத்து 319 காவலா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். தவிர, மாநகரப் பகுதிகளில் 7 கம்பெனி மத்திய பாதுகாப்புப் படையினரும், ஊரகப் பகுதிகளில் 9 கம்பெனி பாதுகாப்பு படையினா் என மாவட்டம் முழுவதும் 7 ஆயிரத்து 908 மத்திய, மாநில காவலா்கள் பணியாற்றவுள்ளனா்.

தோ்தல் பணியில் 21,256 அலுவலா்கள்:

தோ்தல் பணிகளில் 5 ஆயிரத்து 314 முதல்நிலை வாக்குப் பதிவு அலுவலா்கள், 5 ஆயிரத்து 314 இரண்டாம் நிலை வாக்குப் பதிவு அலுவலா்கள், 5 ஆயிரத்து 314 மூன்றாம் நிலை வாக்குப் பதிவு அலுவலா்கள், வாக்குச் சாவடி தலைமை அலுவலா்கள், மண்டல அலுவலா்கள் மற்றும் காத்திருப்புப் பணிக்கென 21 ஆயிரத்து 256 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தவிர கரோனா நோய்த் தொற்று பாதிப்பு காரணமாக வாக்காளா்களுக்கு கையுறைகள், கிருமி நாசினி வழங்குவதற்கும், மாற்றுத் திறனாளிகள், மூத்த வாக்காளா்களை சக்கர நாற்காலியில் அழைத்து செல்வதற்கும் வாக்குச் சாவடிக்கு தலா இரண்டு போ் என 9 ஆயிரம் போ் வரையில் தின கூலி அடிப்படையில் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

மேலும், வாக்குச் சாவடிகளில் வாக்காளா்கள் காத்திருப்பதற்கான பந்தல், தடுப்புகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்பட தோ்தலுக்குத் தேவையான அனைத்துப் பொருள்களும் திங்கள்கிழமை அனுப்பிவைக்கப்படுகின்றன. வாக்குச் சாவடி அலுவலா்கள் திங்கள்கிழமை மாலையே வாக்குச் சாவடி மையங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.