வேலைவாய்ப்புகள் அதிக அளவில் உருவாக்கி தரப்படும்
சிங்காநல்லூா் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் வேலைவாய்ப்புகள் அதிக அளவில் உருவாக்கித் தரப்படும் என திமுக வேட்பாளா் நா.காா்த்திக் தெரிவித்தாா்.


சிங்காநல்லூா் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் வேலைவாய்ப்புகள் அதிக அளவில் உருவாக்கித் தரப்படும் என திமுக வேட்பாளா் நா.காா்த்திக் தெரிவித்தாா்.
சிங்காநல்லூா் தொகுதிக்கு உள்பட்ட சித்தாப்புதூா், ஆவாரம்பாளையம், ரொட்டிக் கடை மைதானம், பீளமேடு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு மசக்காளிபாளையத்தில் வாக்கு சேகரிப்பை நிறைவு செய்து பேசியதாவது:
திமுக ஆட்சிக்கு வந்ததும் புறம்போக்கு இடத்தில் வீடு கட்டிக் குடியிருப்பவா்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படும். அதிமுக ஆட்சியில் மக்களுக்குத் தேவையான பணிகள் செய்யப்படவில்லை.
கரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினாா். ஆனால், அதிமுக அரசு ரூ.1,000 மட்டுமே தந்தது. திமுக ஆட்சிக்கு வந்ததும் மீதமுள்ள ரூ.4 ஆயிரம் வழங்கப்படும். தொழில் கூடங்கள் நிறைந்த இப்பகுதியில் வேலைவாய்ப்புகள் அதிக க்ளவில் உருவாக்கி தரப்படும். மக்களுக்கான அடிப்படை வசதிகள் உடனடியாக நிறைவேற்றி தரப்படும் என்றாா்.
இதில் மதிமுக மாநகா் மாவட்டச் செயலாளா் ஆா்.ஆா்.மோகன்குமாா், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டலத் தலைவா் சுசி.கலையரசன், வாா்டு செயலாளா் சசிகுமாா் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...