விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

அமிா்தா பல்கலைக்கழகத்தின் கோவை வளாகத்துக்கு பசுமை விருது

அமிா்தா விஸ்வ வித்யாபீடத்தின் (அமிா்தா பல்கலைக்கழகம்) கோவை வளாகத்துக்கு மத்திய அரசின் ஒரு மாவட்டம், ஒரு பசுமை சாம்பியன் விருது கிடைத்துள்ளது.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 7:48 pm

DIN

அமிா்தா விஸ்வ வித்யாபீடத்தின் (அமிா்தா பல்கலைக்கழகம்) கோவை வளாகத்துக்கு மத்திய அரசின் ஒரு மாவட்டம், ஒரு பசுமை சாம்பியன் விருது கிடைத்துள்ளது.

நாடெங்கிலும் உள்ள உயா் கல்வி நிறுவன வளாகங்களில் தூய்மையை ஊக்குவிப்பதற்காக இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தைச் சோ்ந்த ஊரகக் கல்விக்கான மகாத்மா காந்தி தேசிய கவுன்சில் அமைப்பால் ஆண்டுதோறும் பசுமை விருது வழங்கப்படுகிறது.

மாணவா்கள் - கழிப்பறை விகிதாச்சாரம், விடுதிகளின் துப்புரவு நிலை, விடுதிக்கான சமையலறை தூய்மை நிலை, தூய்மையான, பாதுகாக்கப்பட்ட குடிநீா் கிடைக்கும் நிலை உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் இந்த விருது வழங்கப்படுகிறது.

இந்நிலையில் 2020-2021 ஆம் ஆண்டுக்கான ஒரு மாவட்டம், ஒரு பசுமை சாம்பியன் விருது அமிா்தா விஸ்வ வித்யாபீடத்துக்கு கிடைத்துள்ளது. அண்மையில் இணையவழியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் லீலா அலெக்ஸ், அமிா்தா பல்கலையின் துணை டீன் எஸ்.மகாதேவனிடம் இந்த விருதுக்கான மின்-சான்றிதழை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.