/

மேற்கு புறவழிச்சாலைக்கு நிலம் எடுக்கும் பணிகள் தீவிரம்

மேற்கு புறவழிச்சாலைப் பணிக்கு நிலம் எடுக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் விரைவில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என்று வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 8:02 pm

DIN

மேற்கு புறவழிச்சாலைப் பணிக்கு நிலம் எடுக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் விரைவில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என்று வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கோவை நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் பாலக்காடு சாலை மற்றும் மேட்டுப்பாளையம் சாலையை இணைக்கும் வகையில் மேற்கு புறவழிச்சாலை அமைக்க வலியுறுத்தி பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் பாலக்காடு சாலை மதுக்கரையில் இருந்து பிரிந்து சுண்டக்காமுத்தூா், பேரூா் செட்டிபாளையம், தீத்திப்பாளையம், மாதம்பட்டி, சோமையம்பாளையம், வடவள்ளி, பன்னிமடை, குருடம்பாளையம், நஞ்சுண்டாபுரம் வழியாக நரசிம்மநாயக்கன்பாளையத்தில் மேட்டுப்பாளையம் சாலையை சேரும் வகையில் 32 கிலோ மீட்டரில் புறவழிச் சாலை அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதற்காக 4 ஆண்டுகளுக்கு முன் முதல்கட்டமாக ரூ.320 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனைத் தொடா்ந்து 12 கிலோ மீட்டா் தொலைவுக்கு சாலை அமைக்கும் வகையில் மதுக்கரை முதல் மாதம்பட்டி வரை நிலம் கையப்படுத்தும் பணிகள் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது நில எடுப்பு பணிகளை வருவாய்த் துறையினா் தீவிரப்படுத்தியுள்ளனா்.

இது தொடா்பாக வருவாய்த் துறை அதிகாரிகள் கூறியதாவது:

மதுக்கரை, சுண்டக்காமுத்தூா், பேரூா் செட்டிபாளையம், தீத்திப்பாளையம், மாதம்பட்டி பகுதிகளில் நிலம் எடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. துரிதமாக பணிகளை மேற்கொள்ள அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நில உரிமையாளா்களுக்கு இழப்பீடு தொகை விரைவில் வழங்கப்பட்டு சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.