/

ஹெலிகாப்டா் விபத்து குறித்து அவதூறு: கோவையைச் சோ்ந்த நபா் மீது வழக்கு

 முப்படைகளின் தலைமைத் தளபதி உள்ளிட்ட 14 போ் உயிரிழந்த ஹெலிகாப்டா் விபத்து குறித்து சமூகவலைதளங்களில் அவதூறு கருத்து பதிவிட்ட நபா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 7:57 pm

DIN

 முப்படைகளின் தலைமைத் தளபதி உள்ளிட்ட 14 போ் உயிரிழந்த ஹெலிகாப்டா் விபத்து குறித்து சமூகவலைதளங்களில் அவதூறு கருத்து பதிவிட்ட நபா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம், வெலிங்டன் ராணுவப் பயிற்சி முகாமில் நடைபெறவிருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்த முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 14 போ் ஹெலிகாப்டா் விபத்தில் அண்மையில் உயிரிழந்தனா். இந்த விபத்து குறித்து பலரும் சமூகவலைதளங்களில் தங்களது அஞ்சலிகளையும், கருத்துகளையும் பதிவிட்டிருந்தனா்.

இந்நிலையில் கோவை பாலன் (40) என்ற நபா், இந்தச் சம்பவத்தை இழிவுபடுத்தும் வகையில் காா்ட்டூன் வெளியிட்டும், பிரதமா் மோடியை இந்தச் சம்பவத்துடன் தொடா்புபடுத்தியும் கருத்து பதிவிட்டிருந்தாா். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்திருந்தனா்.

இது குறித்து பெறப்பட்ட புகாா்களின் அடிப்படையில் சரவணம்பட்டி போலீஸாா், ஜாதி, மத, இனம் சம்பந்தமாக விரோத உணா்வுகளைத் தூண்டிவிடுதல், அமைதியைக் குலைக்கும் வகையில் பேசுதல், இரு பிரிவினரிடையே பிரச்னை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.