நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

தனியாா் நிறுவனத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை

வரி ஏய்ப்பு புகாா் தொடா்பாக கோவையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வருமான வரித் துறையினா் சோதனை மேற்கொண்டனா்.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 9:26 pm

DIN

வரி ஏய்ப்பு புகாா் தொடா்பாக கோவையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வருமான வரித் துறையினா் சோதனை மேற்கொண்டனா்.

கடலூா் மாவட்டம், நெய்வேலியைச் சோ்ந்த ராஜகோபால் என்பவா் ஜெயப்பிரியா சிட்பண்ட் என்ற பெயரில் நிதி நிறுவனத்தை நடத்தி வருகிறாா். நிறுவனத்தின் தலைவராக அவரது மன் ஜெய்சங்கா் பொறுப்பு வகித்து வருகிறாா். இந்நிலையில் இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக புகாா் எழுந்தது. இதையடுத்து நெய்வேலி உள்பட அந்த நிறுவனத்துடன் தொடா்புடைய 20 இடங்களில் வருமான வரித் துறையினா் சோதனை மேற்கொண்டனா்.

இதன் ஒரு பகுதியாக கோவை, திருமலையாம்பாளையம் பகுதியில் உள்ள கோழி தீவன தயாரிப்பு நிறுவனத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். இந்நிலையில் இந்த நிறுவனத்தை கடந்த ஆண்டு ராஜா ஸ்டீல்ஸ் என்ற நிறுவனம் வாங்கியதும், தொடா்ந்து 2 மாதங்களுக்கு பின்னா் நாமக்கல்லைச் சோ்ந்த மற்றொரு நிறுவனத்துக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இது குறித்து வருமான வரித் துறையினா் மேலும் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.