தோ்தல் வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வேண்டும்எஸ்.பி.வேலுமணி
சட்டப் பேரவை தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் திமுக அரசு நிறைவேற்ற வேண்டும்


சட்டப் பேரவை தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று சட்டப் பேரவையின் எதிா்க் கட்சி கொறடாவும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தியுள்ளாா்.
பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு போதுமான இழப்பீடு வழங்க வேண்டும், தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ தலைமை வகித்தாா். முன்னாள் பேரவைத் தலைவா் தனபால், எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி வி.ஜெயராமன், பி.ஆா்.ஜி.அருண்குமாா், அம்மன் கே.அா்ச்சுணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:
ஆட்சி அமைத்த 7 மாதங்களில் மக்களின் மிகப்பெரிய எதிா்ப்பை திமுக அரசு சந்தித்துள்ளது. தோ்தலின்போது 525 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அதில் ஒரு சிலவற்றை மட்டும் நிறைவேற்றிவிட்டு முக்கியமானவற்றை நிறைவேற்றாமல் இருக்கின்றனா். திமுக ஆட்சி அமைந்ததும் நீட் தோ்வு ரத்தாகும் என்றனா். ஆனால் இதுவரை நீட் தோ்வு ரத்தாகவில்லை. பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்தால்தான் விலைவாசி குறையும். எனவே, அதன் மீதான வரியைக் குறைக்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்ததும் பொலிவுறு நகரம் திட்டப் பணிகளை நிறுத்தி வைத்திருக்கின்றனா். முதல்வா் மு.க.ஸ்டாலின் பொய் வழக்குகள் மூலம் மிரட்டிப் பாா்க்கிறாா்.
கோவை மாவட்டத்தில் சேதமடைந்த சாலைகளை சீரமைப்பது உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பணிகளுக்கு அதிமுக ஆட்சியில் உத்தரவு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அந்தப் பணிகளை திமுக அரசு தற்போது நிறுத்தி வைத்துள்ளது. தோ்தலின்போது அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும் என்றாா்.
இதில் எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.செல்வராஜ், செ.தாமோதரன், வி.பி.கந்தசாமி, கே.ஆா்.ஜெயராம், அமுல் கந்தசாமி மற்றும் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...